link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space

திங்கள், 30 மார்ச், 2026

📱 Mobile Battery Save செய்வது எப்படி? – Battery Life அதிகரிக்கும் 10 எளிய வழிகள் | battery life increase tips | 10 best tips for battery 🔋 life increase


Mobile battery life சேமிப்பது எப்படி jpg .

📱Mobile Battery Save செய்வது எப்படி? – Battery Life அதிகரிக்கும் 10 எளிய வழிகள்


🧠 அறிமுகம்

இன்றைய காலத்தில் smartphone இல்லாமல் வாழ்வது கடினம். ஆனால் mobile battery சீக்கிரம் காலியாகிவிடுவது பலருக்கும் பிரச்சனையாக உள்ளது. இந்த கட்டுரையில் mobile battery save செய்வது எப்படி மற்றும் battery life அதிகரிக்கும் எளிய வழிகளை பார்க்கலாம்.


🔋 Mobile battery சீக்கிரம் காலியாகும் காரணங்கள்

  • அதிக brightness
  • Background apps running

  • Internet (WiFi / Mobile data) தொடர்ந்து ON ல் வைத்திருத்தல் 
  • Gaming மற்றும் heavy apps பயன்படுத்துதல்


Mobile Battery- யை Save செய்ய 10 வழிகள்

🔹 1. Screen Brightness குறைக்கவும்

👉 அதிக brightness battery அதிகம் consume ஆகும்

✔ Auto brightness use பண்ணுங்கள்


🔹 2. Background Apps close பண்ணுங்கள்

👉 Use செய்யாத apps close பண்ணவும்

✔ இது battery save செய்ய உதவும்

😊 சிலர் background apps close செய்யாமல் பயன்படுத்துவார்கள் அவர்களது mobile lag ஆகும் மற்றும் battery 🔋 life குறைந்துவிடும் 


🔹 3. Battery Saver Mode ON செய்யுங்கள்


👉 Settings → Battery → Battery Saver

✔ இது power usage குறைக்கும்.


🔹 4. Mobile Data / WiFi தேவையில்லாமல் OFF

👉 Network ON இருந்தால் battery drain

 ஆகும்.

🔏 wifi/ hotspot போன்றவற்றை தேவையான நேரத்தில் மற்றும் On செய்யவும். மற்று நேரத்தில் off செய்து வைத்தால் battery 🔋 drain ஆகாது


🔹 5. Location (GPS) OFF பண்ணுங்கள்

👉 தேவையில்லாமல் ON இருந்தால் battery குறையும்.


6. Dark Mode பயன்படுத்துங்கள்

👉 AMOLED display phonesக்கு இது best

✔ battery life increase ஆகும்


🔹 7. Notifications limit பண்ணுங்கள்

👉 அதிக notifications battery drain ஆகும்


🔹 8. Apps update செய்யுங்கள்

👉 Updated apps → less battery usage


🔹 9. Screen Timeout குறைக்கவும்

👉 30 seconds அல்லது 1 minute set பண்ணுங்கள்


🔹 10. Original charger பயன்படுத்துங்கள்

👉 Duplicate charger battery life குறைக்கும்


🌿
Battery life அதிகரிக்க tips

  • Phone heat ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
  • Charging போது heavy usage avoid பண்ணுங்கள்
  • 20%–80% rangeல charge maintain பண்ணுங்கள்


⚠️ கவனிக்க வேண்டியவை...

  1. Overcharge avoid பண்ணுங்கள்
  2. Battery fully 0% ஆக விடாதீர்கள்
  3. Cheap accessories use பண்ணாதீர்கள்


📝 முடிவு

  • Mobile battery save செய்வது மிகவும் எளிது.
  • மேலே கூறிய tips follow பண்ணினால் உங்கள் mobile battery life அதிகரிக்கும். 
  • தினசரி இந்த பழக்கங்களை பின்பற்றினால் battery பிரச்சனை குறையும்.

ஞாயிறு, 29 மார்ச், 2026

ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி pranayama, Breathing 🫁 Exercise 🧘‍♂️🧘‍♀️🧘😊


🧘‍♂️ மூச்சுப் பயிற்சி: இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழி

📌 அறிமுகம்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், தூக்கமின்மை, சோர்வு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், எளிமையான மற்றும் இயற்கையான ஒரு தீர்வு மூச்சுப் பயிற்சி ஆகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும்.

யோகத்தில் முக்கியமான ஒரு பகுதி தான் Pranayama. இந்தப் பயிற்சிகள் மூச்சின் ஓட்டத்தை கட்டுப்படுத்தி உடலின் சக்தியை சமநிலைப்படுத்துகின்றன.

🌿 மூச்சுப் பயிற்சி என்றால் என்ன?

மூச்சைப் பற்றிய விழிப்புணர்வுடன் அதை கட்டுப்படுத்தும் முறைகளே மூச்சுப் பயிற்சிகள் ஆகும். சாதாரணமாக நாம் கவனிக்காமல் மூச்சை எடுக்கிறோம். ஆனால், சரியான முறையில் மூச்சைப் பயன்படுத்தினால் நம் உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராக செல்லும்.

இதனால் உடல் செயல்பாடுகள் மேம்பட்டு, ஆரோக்கியம் உயரும்.

🧘‍♀️ முக்கியமான மூச்சுப் பயிற்சிகள்

1. ஆழ்மூச்சு (Deep Breathing)

இந்தப் பயிற்சி மிகவும் எளிமையானது. மூக்கின் மூலம் மெதுவாக மூச்சை இழுத்து, சில விநாடிகள் தங்கி, பின்னர் மெதுவாக வெளியே விட வேண்டும். இது மன அமைதியை தருகிறது.

2. நாடி சோதனை 

(Alternate Nostril Breathing)

ஒரு மூக்கில் மூச்சை இழுத்து மற்ற மூக்கில் வெளியே விடும் முறை. இது நரம்பு அமைப்பை சமநிலைப்படுத்தி மன அமைதியை அதிகரிக்கிறது.

3. கபாலபாதி

(Kapalbhati)

இந்த முறையில் வேகமாக மூச்சை வெளியே தள்ள வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

4. பிரம்மரி

(Bhramari Pranayama)

மூச்சை வெளியே விடும்போது “ம்…” என்ற ஒலி எழுப்புவது இந்தப் பயிற்சி. இது மனஅழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை தருகிறது.

🌸 மூச்சுப் பயிற்சியின் நன்மைகள்

மனஅழுத்தம் மற்றும் கவலை குறையும்

நுரையீரல் திறன் அதிகரிக்கும்

இரத்த ஓட்டம் சீராகும்

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்

தூக்கத்தின் தரம் உயரும்

⏰ தினசரி எப்படி செய்யலாம்?

மூச்சுப் பயிற்சியை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்வது போதுமானது. காலையில் வெறும் வயிற்றில் செய்வது சிறந்தது. அமைதியான சூழலில் செய்யும் போது அதிக பயன் கிடைக்கும்.

⚠️ கவனிக்க வேண்டியவை

ஆரம்பத்தில் மெதுவாக செய்ய வேண்டும்

உடல் நலப் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்

அதிகமாக முயற்சி செய்ய வேண்டாம்

🏁 முடிவுரை

மூச்சுப் பயிற்சி என்பது எளிமையானது ஆனால் மிகவும் சக்திவாய்ந்தது. தினசரி இதை பின்பற்றுவதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். இயற்கையான முறையில் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் இதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்க வேண்டும்.

சனி, 28 மார்ச், 2026

மருத்துவ தாகம் ராம்குமார் எம்.ஏ


மருத்துவ கனவு



 கனவுகள் சில

 நேரம் கேட்காமல்

வழி மாற்றிக் கொள்கின்றன...


வெள்ளை கோட்டின் கனவு

சாமான்ய சட்டையில் 

மறைந்து போகிறது...


ஸ்டெதஸ்கோப் தொங்க வேண்டிய கழுத்தில்

அடையாள அட்டை சுமந்தபடி நிற்கிறேன்...


ஊசி பிடிக்கப் பிறந்த விரல்கள்

சாக்பீஸ் தூளில் மூழ்கிக் கிடக்கின்றன...


வெள்ளைத் தாளில் உயிர் காக்கும் மருந்து வரிகள் அல்ல

கரும்பலகையில் கனவு

கற்பிக்கும் குறிப்புகள்...


மருந்தும் இரத்தக் கரையும் பதிலாக

என் உள்ளங்கையில்

சாக்பீஸ் துகளும் பேனா மையும்...


அறுவை அரங்கிலே

அறுவை சிகிச்சை செய்யாமல்

வகுப்பறையில்அ றிவு சிகிச்சை

 செய்து கொண்டிருக்கிறேன்...


நோயாளியின் துடிப்பை கேட்காமல்

மாணவர்களின் எதிர்கால துடிப்பை வடிவமைக்கின்றேன்...


அறிவை காப்பாற்றும் சிகிச்சையும்

உயிரைக் காப்பாற்றும் சிகிச்சைதான்...


அழுக்காறாமை கற்பிக்கும் 

ஆசிரியனாய் நின்றும்

மருத்துவரை பார்த்து 

பொறாமை கொள்கின்றேன்...

எப்போது அடங்குமோ

இந்த மருத்துவ தாகம்...!...!


                            ம. இராம்குமார், எம்.ஏ


தமிழரும் தொழில்நுட்பமும் ஒரு மதிப்பெண் வினா பழங்கால தமிழர்களின் ஆடை மற்றும் நெசவு தொழில் | Tamil and Technology Unit 1

 தமிழரும் தொழில்நுட்பம்- 1000232110

அலகு-1

நெசவு தொழில்

தமிழர் வாழ்க்கை

பழங்கால ஆடை

Tamil and Technology Unit 1

Ancient Tamil weaving

Paruthi Nesavu




1. மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை?

அ) தங்கம் மற்றும் வெள்ளி

ஆ) உணவு மற்றும் உடை

இ) கல்வி மற்றும் கலை

ஈ) ஆயுதம் மற்றும் வீடு

விடை : ஆ) உணவு மற்றும் உடை


2. உணவுப் பொருட்களைச் சமைக்கவும் சேகரிக்கவும் பாதுகாக்கவும்பயன்படுத்தப்பட்டது எது?

அ) உலோகப் பொருட்கள்

ஆ) மரம்

இ) மட்பாண்டங்கள்

ஈ) பனை ஒலை

விடை:

இ) மட்பாண்டங்கள்


3. கருப்பு சிவப்பு பாண்டங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?.

அ) மத சடங்குகள்

ஆ) தமிழரின் கல்வி

இ) காலத்தின் தொன்மை

ஈ) போர்திறமை

விடை: இ) காலத்தின் தொன்மை


4. பருத்திப்பெண்டின் மூலப்பொருள் யாது

அ) பருத்தி

ஆ) வேம்பு

இ) மூங்கில்

ஈ) அவுரி

விடை: அ) பருத்தி

5. தமிழில் பொறிக்கப்பட்ட கீறல் குறியீடுகள் எதை வெளிப்படுத்துகின்றன?

அ) போர் சம்பந்தமான அறிவு

ஆ) அரசியல் சட்டங்கள்

இ) தமிழரின் கல்விசார் அறிவு

ஈ) வேளாண்மை முறை

விடை: இ) தமிழரின் கல்விசார் அறிவு


6. பின்னல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட பண்டைகால மூலப்பொருட்களாக குறிப்பிடப்படுவன எவை?

அ) இரும்பு மற்றும் செம்பு

ஆ) மரப்பட்டை வேர். புற்கள்

இ) பட்டு மற்றும் பருத்தி

ஈ) கல் மற்றும் மணல்

விடை: ஆ) மரப்பட்டை வேர், புற்கள்


7. பின்னல் வேலைக்கு தேவையான முக்கிய திறன் எது?

அ) மூலப்பொருளைக் கையாளும் அறிவும் கைவண்ணமும்

ஆ) இசை அறிவு

இ) வேட்டைத்திறன்

ஈ) போர்திறன்

விடை: அ) மூலப்பொருளைக் கையாளும் அறிவும் கைவண்ணமும்


8. பனாமாத் தொப்பிகள் (வைக்கோல் தொப்பிகள்) எதைச் சான்றாகக் காட்டுகின்றன?

அ) பழங்குடியினரின் மத சடங்கு

ஆ) பழங்குடியினரின் கல்வி

இ) இயந்திரங்களாலும் செய்ய இயலாத நுட்பம்

ஈ) போர் முறைகள்

விடை:இ) இயந்திரங்களாலும் செய்ய இயலாத நுட்பம்


9.மீன், முயல் போன்றவற்றைப் பிடிக்க எந்த பொருள்ப யன்படுத்தப்பட்டது?

அ) வில்

ஆ) வலை

இ) கல்

ஈ)ஈட்டி

விடை: ஆ) வலை


10. கூற்று வகை.

கூற்று 1 நெருக்கமாகப் பின்னப்பட்ட வலைகள் ஆடை நெய்தலுக்கு வழிவகுத்தன.

கூற்று 2. ஆரம்பத்தில் பருத்தி, கம்பளி போன்றவற்றை பயன்படுத்தினர்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு


விடை: அ) கூற்று 1 மட்டும் சரி


11. பிலிப்பைன்ஸில் ஆடை தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருள் எது?

அ) மல்பெரி மரவுரி

ஆ) வாழை நார்

இ) பருத்தி

ஈ) கம்பளி

விடை: ஆ) வாழை நார்


12. பன்னாடை அல்லது நெய்யரி எதைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது?

அ) பருத்தி

ஆ) பனைமரம்

இ) மல்பெரி மரவுரி

ஈ) வாழை நார்

விடை: ஆ) பனைமரம்


12. மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சை தூகாக நெய்து ஆடையாக அணியத் தொடங்கிய முயற்சி எதை உருவாக்கியது?

அ) வேளாண் தொழில்

 ஆ) நெசவு தொழிங்

இ) விலங்கு வார்ப்பு

ஈ) ஆடை இறக்குமதி

விடை: ஆ) நெசவு தொழில்


13. பன்னாடை என்றால் என்ன ?

அ) பருத்தி செடியின் நூல்

ஆ) பனை மற்றும் தென்னையின் இளைய மரத்து அடியில் இருக்கும் துணி போன்ற பொருள்

இ) மல்பெரி மரத்தின் தண்டு

ஈ) கம்பளி விலையின் தோல்

விடை: ஆ) பனை மற்றும் தென்னையின் இளைய மரத்து அடியில் இருக்கும்


14. பழங்காலத்தில் மக்கள் ஆடையாக பயன்படுத்திய பொருட்களில் எது அடங்காது?

அ) தழை மற்றும் இலை ஆடைகள்

 ஆ) மரப்பட்டைகள் 

(இ) மான் மற்றும் புலி தோல்

ஈ) பருத்தி பஞ்சால் நெய்த ஆடை

பதில்: ஈ) பருத்தி பஞ்சால் நெய்த ஆடை

15. "கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ என்றவரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ) தொல்காப்பியம் 

ஆ) திருக்குறள்

இ) நன்னூல் 

ஈ) சிலப்பதிகாரம்

விடை: அ) தொல்காப்பியம்


16 "பருத்தி நெசவு முதன் முதலில் இந்தியாவில்தான் செய்யப்பட்டதென்றும். அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவியது" என்ற கூற்றைக் கூறியவர் யார்?

அ)வயவர் சான்மார்சல் 

ஆ) கால்டுவெல் 

இ) ஜி.யு.போப் 

ஈ) ஜோஸ்ப் பெஸ்கி

விடை அ) வயவர் சான்மார்சல்


17. ஹெரடோடஸ் இந்திய பஞ்சை

எவ்வாறு குறிப்பிட்டார்?

அ) மரங்களில் வளரும் பஞ்சு

ஆ) மண்ணில் வளரும் பஞ்சு"

இ) ஆடுகளால் தரப்படும் பஞ்சு

ஈ) 'வானத்தில் மிதக்கும் பஞ்சு*

விடை: அ) மரங்களில் வளரும் பஞ்சு


18. எகிப்தில் அரசர்களின் உடல்கள் எதனால் பொதியப்பட்டிருந்தன?

அ) சீன பட்டு

ஆ) இந்திய மசுலின் துணி

(இ) அரேபிய பட்டு

ஈ) எலுமிச்சை இலை

விடை: ஆ) இந்திய மசுலின் துணி


19. பருத்திக்கு அப்பாற்பட்டு எந்தெந்த மரங்களில் இருந்து பஞ்சு சேகரிக்கப்பட்டது?

அ)இலவமரம், கோங்குமரம்

ஆ) தேங்காய் மரம் பனைமரம்

இ) வேப்பமரம், ஆமணக்கு மரம்

ஈ) மாமரம். கொய்யா மரம்


விடை அ) இலவமரம் கோங்குமரம்


20. பின்வருவனவற்றுள் நெசவுத் தொழிலுக்கு முதன்மை மூலப்பொருள் எது?

அ) வேப்பமரம்

ஆ) பருத்தி

இ) கள்ளி

ஈ) கஞ்சா இலை

விடை: ஆ) பருத்தி

21.பருத்தியை விதைகள் மற்றும் தோலிலிருந்து பிரிக்க எந்த கருவிபயன்படுத்தப்பட்டது?

அ) அச்சாணி

ஆ) மத்து

இ) அரிவாள்

ஈ) கலப்பை

விடை ஆ) மத்து


22.புறநானூற்றில் 'சிறை' மற்றும் 'செற்றை' என்பவை எதை குறிக்கின்றன?

அ) பருத்தியின் மலர் மற்றும் பழம்

ஆ) பருத்தியின் புறத்தோல் மற்றும் தூசி

இ) பருத்தியின் விதை மற்றும் முள்

ஈ) பருத்தியின் நூல் மற்றும் நார்

விடை: ஆ) பருத்தியின் புறத்தோல் மற்றும் தூசி


23. அகநானூற்றில் மழைக்கு பின் மேகத்திற்கு கொடுக்கப்பட்ட உவமை எது?

அ) வில்லெறி பஞ்சு

ஆ) கண்ணாடி ஒளி

இ) வெண்மணி

ஈ) முத்துக்கள்

விடை அ) வில்லெறி பஞ்சு


24. நற்றிணையில் வில்லெறி பஞ்சு எதற்குச் சமானமாகக் கூறப்பட்டது?

அ) மலையின் பனி

ஆ) கடல் நுரை

இ) ஆற்றின் நீர்

(ஈ) நிலாவின் ஒளி

விடை: ஆ) கடலின் நுரை

25.பருத்திப் பஞ்சை நுண்ணிய நூலாக நூற்பதில் திறமை பெற்ற பெண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

அ) ஆடற் பெண்டிர்

ஆ) பருத்திப் பெண்டிர்

இ) பாடற் பெண்டிர்

ஈ) காவற் பெண்டிர்

விடை: ஆ) பருத்திப் பெண்டிர்

26.முற்காலத்தில் கணவரை இழந்த பெண்கள் பெரிதும் ஈடுபட்ட தொழில் எது?

அ) வேளாண்மை

ஆ)நூற்பு

இ) மண் பானைச் செய்தல்

ஈ) மீன்பிடி

விடை ஆ) நூற்பு.

27. பருத்திப் பெண்டிர் என ஏன் அழைக்கப்பட்டனர்?

அ) ஏர் உழுதமையால்

ஆ) பருத்தி நூல் நூற்றமையால்

இ) தையல் செய்தமையால்

ஈ) விவசாயம்செய்தமையால்

விடை: ஆ) பருத்தி நூல் நூற்றமையால்


28.பருத்திப் பெண்கள் நூற்ற நூலைப் பாவாக விரித்து ஆடையாகக் கொடுத்த

கடமை யாருக்கு இருந்தது?

அ) பெண்கள்

ஆ)குழந்தைகள்

இ) ஆண்கள்

ஈ) முதியோர்

விடை: இ) ஆண்கள்


29 திறந்தவெளியில் நான்கு அடி உயரத்தில் பல கற்கள் நட்டு நூல்கள்ட் கட்டப்பட்ட இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

அ) வீடு

ஆ) பாவடி

இ) கல்லறை

ஈ) மாளிகை


விடை: ஆ) பாவடி


30. முப்பது திரிகள் கொண்டது எவ்வாறு அழைக்கப்பட்டது?

அ) ஒரு பாவு

ஆ) ஒரு கட்டு

இ) ஒரு போவணி

ஈ) ஒரு ஜத்தம்


விடை :ஆ) ஒரு கட்டு


31 ராட்டை இயந்திரத்தின் மூலம் நூலாக்கப்படும் திரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

அ)எதிர் 

ஆ) போவனி 

இ) பாவு 

ஈ) பாவுஜத்தம்

விடை: அ) கதிர்


32. போவனியில் சேமிக்கப்பட்ட நூல்கள் அடுத்ததாக மாற்றப்படும் சக்கரத்தின் பெயர் என்ன?

அ) கட்டு

ஆ) பாவு

இ) பாவுஐத்தம்

ஈ) கதிர்

விடை: (இ) பாவுஜத்தம்


33. பாவுஜத்தத்தில் உள்ள நூல்களின் சராசரி நீளம் மற்றும் எண்ணிக்கை என்ன?

அ) 20 மீட்டர். 2000 இழைகள்

ஆ) 30 மீட்டர்.3000 இழைகள்

இ) 40 மீட்டர்,4000 இழைகள்

ஈ) 50 மீட்டர். 5000 இழைகள்

விடை: இ) 40 மீட்டர். 4000 இழைகள்



34. பாவு நூலின் மீது என்ன பூசி இளவெயிலில் காயவைத்தனர்?


அ) பால்

ஆ) அரிசிக்கஞ்சி

இ) தேன்

ஈ) எண்ணெய்

விடை:  ஆ) அரிசிக்கஞ்சி


35. பாவு ஒட்டுதலுக்குப் பயன்படுத்திய குச்சி எதனால் செய்யப்பட்டதாய் இருந்தது?

அ) சுல்

ஆ) முன்

இ) மரவேர்

ஈ) எலும்பு

விடை: இ) மரவேர்


36. பாவுக்குச்சியின் நீளம் சுமார் எவ்வளவு?

அ) 3 அடி

ஆ) 4 அடி

இ) 5 அடி

ஈ) 6 அடி

விடை: ஈ) 6 அடி


37. பாவு ஒட்டுதல் நடந்தபின் நூல்கள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன

அ) பாய் நெய்ய

ஆ) கைத்தறி நெசவுக்கு

இ) கயிறு செய்

ஈ) ஓவியம் வரைய


விடை ஆ) கைத்தறி நெசவுக்கு


38. துணி நெய்யப் பயன்படுத்திய முக்கிய இயந்திரம் எது?


அ ) கலப்பை

ஆ) தறி

இ) மத்து

ஈ) உலக்கை


விடை ஆ) தறி


39. கீழ்காண்பனவற்றுள் தறியின் ஒரு பகுதி எது?


அ) அச்சு மரம்

ஆ) அரிவாள்

இ) விறகு

ஈ)அச்சு மரம்

விடை: அ) அச்சு மரம்


40 தெசவுத் தொழில் பழங்காலத்தில் எவ்வாறு நடைபெற்றது?

அ) அரண்மனைகளில்

ஆ) வெளிநாடுகளில்

இ) குடிசைத் தொழில்போல் வீடுகளில்

ஈ) சந்தையில்

விடை: இ) குடிசைத் தொழில்போல் வீடுகளில்


41. பெரும்பாணாற்றுப்படை" வரிகளில் 'கச்சு' என்பது எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?


அ) தலைக்கு அணியும் ஆடை

ஆ) மார்பில் அணியும் ஆடை

இ) கையில் அணியும் ஆடை

ஈ) இடுப்பில் அணியும் ஆடை

விடை: ஆ) மார்பில் அணியும் ஆடை


42 மெய்யாப்பு எனப்படுவது எந்த வகை ஆடை

அ) சட்டை

ஆ) புடவை

இ) கச்சு,

ஈ) நெற்றி அலங்காரம்

(விடை: அ) சட்டை


43. ஆடைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பெயர்களில் ஒன்று அல்லாதது எது?

அ) துகில் 

ஆ) சேக்கை

இ) பூந்துகில்

ஈ) வலயம்

விடை: ஈ) வலயம்



44. அடியார்க்கு நல்லார் குறிப்பிட்ட ஆடைகளின் பெயர்கள் எண்ணிக்கை எத்தனை?

அ) 16

ஆ) 28

இ) 36

ஈ) 40

விடை: இ) 36


45 பழந்தமிழ் அரசர்கள் வறியவர்களுக்கு அளித்த உடைகள் எவ்வாறு விருத்தனர்


அ) பாம்பின் தோல் போல பளபளப்புடன் பூ வேலைப்பாடுகளோடு

ஆ) எளிய பஞ்சுத் துணிகள்

இ) கிழிந்த பழைய உடைகள்

ஈ) வண்ணமற்ற கோரைகள்

விடை: 

அ) பாம்பின் தோல் போல பளபளப்புடன் பூ வேலைப்பாடுகளோடு

ஞாயிறு, 4 ஜூன், 2023

சிறுபாணாற்றுப்படையில் பாணனின் வறுமை

     

    

              சிறுபாணாற்றுப்படை 


சங்க இலக்கிய நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் மூன்றாவதாக அமைந்துள் நூல் சிறுபாணாற்றுப்படை ஆகும்.

சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் ஆவார்.

இந்நூல் மொத்தம் 269 அடிகளைக் கொண்டதாகும்.

ஓய்மாநாட்டு நல்லிமக் கோடனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூலாகும்.

நல்லியக்கோடனனிடம் பரிசில் பெற்ற சிறுபாணன் வழியில் வரும் இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததே சிறுபாணாற்றுப்படை ஆகும்.

ஆற்றுப்படுத்துவது என்றால் நெறிப்படுத்துதல் என்ற பொருள். வழியில் வரும் பாணனை நல்லியக்கோடனிடம் சென்றால் உமக்கும் பொருள் கிடைக்கும் அதனால் வறுமை நீங்கும் என்று கூறுவதே ஆகும்.


பாணனின் வறுமை

                                    சிறுபாணன் நடந்துச் செல்லும் அவ்வழியானது மிகவும் கொடியது என்றாலும் அந்த வழியில் தான் சென்றாகவேண்டும். ஏனெனில் தன் பசியைப் போக்க பரிசில் வருவோரை தேடிச் செல்ல வேண்டும். இதுவே பாணனின் வாழ்வியல் நிலையாக உள்ளது எனலாம்.

............................. விண்ணா 

டிறவாக் கண்ண சாய்செவிக் 

குருவை...

கறவாப் பான்முலை கவர்த

நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ

னனட்டிற்.

என்ற பாடல் வரிகளின் மூலம் பாணனின் வறுமையை அறியமுடிகின்றது.

இந்தப் பாடல் வரிகளின் மூலம் பாணனின் அடுப்பங்கரை எவ்வாறு உள்ளது என்பதை அறியமுடிகிறது.

நாய்கள் பொதுவாக குட்டிகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் ஈனும் ஆனால் இங்கோ அடுப்பங்கரையில் குட்டிகளை ஈன்று இருக்கிறதென்றால் பாணன் வீட்டில் சமைக்க அடுப்பங்கரைக்கு சென்று எவ்வளவு நாள் ஆகியிருக்கும் என்ற வறுமை நிலையை இதன் மூலம் அறியலாம். அடுப்பங்கரையில் கண்களை திறக்காத அந்த நாய் குட்டிகள் தாயின் மடியில் பால் குடிக்கின்றன. ஆனால் தாயோ வற்றிய முலையுடன் இருப்பதால் வலியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. வறுமையின் காரணமாக நாய்களும் உணவில்லை.


இப்படிப்பட்ட வீட்டில் பசியினால் வருந்தி ஒடுங்கிய வயிறையும் கைகளில் வளையல்களை அணிந்துள்ள பாணனின் மனைவியான பாடினி தன் கை விரல் நகங்களால் குப்பையில் உள்ள கீரையினைக் கிள்ளி அவற்றை உப்பில்லாமல் சமைக்கிறாள். உப்புக் கூட வாங்க முடியாத அளவிற்கு ஏழ்மையில் இருந்தது. எனவே உப்பில்லாமல் சமைத்த அந்த குப்பைக் கீரையை உண்பதைப் பார்த்தால் நினைப்பார்கள் என்று அஞ்சி தெருக் கதவினை அடைத்துவிட்டு சாப்பிட்டனர். இப்படிப்பட்ட பாணனின் வறுமைச் செய்திகளை இதன் மூலம் நன்கு அறியமுடிகின்றது.







சனி, 3 ஜூன், 2023

சிறுபாணாற்றுப்படை கடையெழு வள்ளல்களின் சிறப்புகள்


சிறுபாணாற்றுப்படை 


சிறுபாணாற்றுப்படை என்னும் இந்நூல் பத்துப்பாட்டில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் ஆவார்.

இவர் ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.

    கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்களாவனர்
 பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி போன்றோர்கள் ஆவர்.



பேகன்

பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.


பாரி

பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.

பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப்படாத ஒரு பாடல் இது:

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே. (புறம். 107)


காரி

திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.

இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்: ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்!

காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.


ஆய்

பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.


அதியமான்

அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.

இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலியுடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.

அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.


நள்ளி

மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.

நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.


ஓரி

சிறிய மலைகள் உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லவராதலின், இவ் வள்ளலை "வல்வில் ஓரி" என்றும் அழைப்பர்.

ஒரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன். ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!

ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.

இந்த கடையெழு வள்ளல்களின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.

💰 பணத்தை மிச்சம்🥱 செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி (2026) How to save money 2026| proper guidance and tips🛜🔏✨😃

  Money_saving_Tips_jpg  பணத்தை சேமிப்பது எப்படி? இன்றைய வேகமான வாழ்க்கையில் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை சரியாக சேமிப்பதும் (Saving) மிகவு...