link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space

ஞாயிறு, 29 மார்ச், 2026

ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி pranayama, Breathing 🫁 Exercise 🧘‍♂️🧘‍♀️🧘😊


🧘‍♂️ மூச்சுப் பயிற்சி: இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழி

📌 அறிமுகம்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், தூக்கமின்மை, சோர்வு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், எளிமையான மற்றும் இயற்கையான ஒரு தீர்வு மூச்சுப் பயிற்சி ஆகும். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும்.

யோகத்தில் முக்கியமான ஒரு பகுதி தான் Pranayama. இந்தப் பயிற்சிகள் மூச்சின் ஓட்டத்தை கட்டுப்படுத்தி உடலின் சக்தியை சமநிலைப்படுத்துகின்றன.

🌿 மூச்சுப் பயிற்சி என்றால் என்ன?

மூச்சைப் பற்றிய விழிப்புணர்வுடன் அதை கட்டுப்படுத்தும் முறைகளே மூச்சுப் பயிற்சிகள் ஆகும். சாதாரணமாக நாம் கவனிக்காமல் மூச்சை எடுக்கிறோம். ஆனால், சரியான முறையில் மூச்சைப் பயன்படுத்தினால் நம் உடல் முழுவதும் ஆக்சிஜன் சீராக செல்லும்.

இதனால் உடல் செயல்பாடுகள் மேம்பட்டு, ஆரோக்கியம் உயரும்.

🧘‍♀️ முக்கியமான மூச்சுப் பயிற்சிகள்

1. ஆழ்மூச்சு (Deep Breathing)

இந்தப் பயிற்சி மிகவும் எளிமையானது. மூக்கின் மூலம் மெதுவாக மூச்சை இழுத்து, சில விநாடிகள் தங்கி, பின்னர் மெதுவாக வெளியே விட வேண்டும். இது மன அமைதியை தருகிறது.

2. நாடி சோதனை 

(Alternate Nostril Breathing)

ஒரு மூக்கில் மூச்சை இழுத்து மற்ற மூக்கில் வெளியே விடும் முறை. இது நரம்பு அமைப்பை சமநிலைப்படுத்தி மன அமைதியை அதிகரிக்கிறது.

3. கபாலபாதி

(Kapalbhati)

இந்த முறையில் வேகமாக மூச்சை வெளியே தள்ள வேண்டும். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

4. பிரம்மரி

(Bhramari Pranayama)

மூச்சை வெளியே விடும்போது “ம்…” என்ற ஒலி எழுப்புவது இந்தப் பயிற்சி. இது மனஅழுத்தத்தை குறைத்து நல்ல தூக்கத்தை தருகிறது.

🌸 மூச்சுப் பயிற்சியின் நன்மைகள்

மனஅழுத்தம் மற்றும் கவலை குறையும்

நுரையீரல் திறன் அதிகரிக்கும்

இரத்த ஓட்டம் சீராகும்

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்

தூக்கத்தின் தரம் உயரும்

⏰ தினசரி எப்படி செய்யலாம்?

மூச்சுப் பயிற்சியை தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்வது போதுமானது. காலையில் வெறும் வயிற்றில் செய்வது சிறந்தது. அமைதியான சூழலில் செய்யும் போது அதிக பயன் கிடைக்கும்.

⚠️ கவனிக்க வேண்டியவை

ஆரம்பத்தில் மெதுவாக செய்ய வேண்டும்

உடல் நலப் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்

அதிகமாக முயற்சி செய்ய வேண்டாம்

🏁 முடிவுரை

மூச்சுப் பயிற்சி என்பது எளிமையானது ஆனால் மிகவும் சக்திவாய்ந்தது. தினசரி இதை பின்பற்றுவதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை காணலாம். இயற்கையான முறையில் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் இதை வாழ்க்கையின் ஒரு பகுதியாக்க வேண்டும்.

சனி, 28 மார்ச், 2026

மருத்துவ தாகம் ராம்குமார் எம்.ஏ


மருத்துவ கனவு



 கனவுகள் சில

 நேரம் கேட்காமல்

வழி மாற்றிக் கொள்கின்றன...


வெள்ளை கோட்டின் கனவு

சாமான்ய சட்டையில் 

மறைந்து போகிறது...


ஸ்டெதஸ்கோப் தொங்க வேண்டிய கழுத்தில்

அடையாள அட்டை சுமந்தபடி நிற்கிறேன்...


ஊசி பிடிக்கப் பிறந்த விரல்கள்

சாக்பீஸ் தூளில் மூழ்கிக் கிடக்கின்றன...


வெள்ளைத் தாளில் உயிர் காக்கும் மருந்து வரிகள் அல்ல

கரும்பலகையில் கனவு

கற்பிக்கும் குறிப்புகள்...


மருந்தும் இரத்தக் கரையும் பதிலாக

என் உள்ளங்கையில்

சாக்பீஸ் துகளும் பேனா மையும்...


அறுவை அரங்கிலே

அறுவை சிகிச்சை செய்யாமல்

வகுப்பறையில்அ றிவு சிகிச்சை

 செய்து கொண்டிருக்கிறேன்...


நோயாளியின் துடிப்பை கேட்காமல்

மாணவர்களின் எதிர்கால துடிப்பை வடிவமைக்கின்றேன்...


அறிவை காப்பாற்றும் சிகிச்சையும்

உயிரைக் காப்பாற்றும் சிகிச்சைதான்...


அழுக்காறாமை கற்பிக்கும் 

ஆசிரியனாய் நின்றும்

மருத்துவரை பார்த்து 

பொறாமை கொள்கின்றேன்...

எப்போது அடங்குமோ

இந்த மருத்துவ தாகம்...!...!


                            ம. இராம்குமார், எம்.ஏ


தமிழரும் தொழில்நுட்பமும் ஒரு மதிப்பெண் வினா பழங்கால தமிழர்களின் ஆடை மற்றும் நெசவு தொழில் | Tamil and Technology Unit 1

 தமிழரும் தொழில்நுட்பம்- 1000232110

அலகு-1

நெசவு தொழில்

தமிழர் வாழ்க்கை

பழங்கால ஆடை

Tamil and Technology Unit 1

Ancient Tamil weaving

Paruthi Nesavu




1. மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை?

அ) தங்கம் மற்றும் வெள்ளி

ஆ) உணவு மற்றும் உடை

இ) கல்வி மற்றும் கலை

ஈ) ஆயுதம் மற்றும் வீடு

விடை : ஆ) உணவு மற்றும் உடை


2. உணவுப் பொருட்களைச் சமைக்கவும் சேகரிக்கவும் பாதுகாக்கவும்பயன்படுத்தப்பட்டது எது?

அ) உலோகப் பொருட்கள்

ஆ) மரம்

இ) மட்பாண்டங்கள்

ஈ) பனை ஒலை

விடை:

இ) மட்பாண்டங்கள்


3. கருப்பு சிவப்பு பாண்டங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?.

அ) மத சடங்குகள்

ஆ) தமிழரின் கல்வி

இ) காலத்தின் தொன்மை

ஈ) போர்திறமை

விடை: இ) காலத்தின் தொன்மை


4. பருத்திப்பெண்டின் மூலப்பொருள் யாது

அ) பருத்தி

ஆ) வேம்பு

இ) மூங்கில்

ஈ) அவுரி

விடை: அ) பருத்தி

5. தமிழில் பொறிக்கப்பட்ட கீறல் குறியீடுகள் எதை வெளிப்படுத்துகின்றன?

அ) போர் சம்பந்தமான அறிவு

ஆ) அரசியல் சட்டங்கள்

இ) தமிழரின் கல்விசார் அறிவு

ஈ) வேளாண்மை முறை

விடை: இ) தமிழரின் கல்விசார் அறிவு


6. பின்னல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட பண்டைகால மூலப்பொருட்களாக குறிப்பிடப்படுவன எவை?

அ) இரும்பு மற்றும் செம்பு

ஆ) மரப்பட்டை வேர். புற்கள்

இ) பட்டு மற்றும் பருத்தி

ஈ) கல் மற்றும் மணல்

விடை: ஆ) மரப்பட்டை வேர், புற்கள்


7. பின்னல் வேலைக்கு தேவையான முக்கிய திறன் எது?

அ) மூலப்பொருளைக் கையாளும் அறிவும் கைவண்ணமும்

ஆ) இசை அறிவு

இ) வேட்டைத்திறன்

ஈ) போர்திறன்

விடை: அ) மூலப்பொருளைக் கையாளும் அறிவும் கைவண்ணமும்


8. பனாமாத் தொப்பிகள் (வைக்கோல் தொப்பிகள்) எதைச் சான்றாகக் காட்டுகின்றன?

அ) பழங்குடியினரின் மத சடங்கு

ஆ) பழங்குடியினரின் கல்வி

இ) இயந்திரங்களாலும் செய்ய இயலாத நுட்பம்

ஈ) போர் முறைகள்

விடை:இ) இயந்திரங்களாலும் செய்ய இயலாத நுட்பம்


9.மீன், முயல் போன்றவற்றைப் பிடிக்க எந்த பொருள்ப யன்படுத்தப்பட்டது?

அ) வில்

ஆ) வலை

இ) கல்

ஈ)ஈட்டி

விடை: ஆ) வலை


10. கூற்று வகை.

கூற்று 1 நெருக்கமாகப் பின்னப்பட்ட வலைகள் ஆடை நெய்தலுக்கு வழிவகுத்தன.

கூற்று 2. ஆரம்பத்தில் பருத்தி, கம்பளி போன்றவற்றை பயன்படுத்தினர்.

அ) கூற்று 1 மட்டும் சரி

ஆ) கூற்று 2 மட்டும் சரி

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு


விடை: அ) கூற்று 1 மட்டும் சரி


11. பிலிப்பைன்ஸில் ஆடை தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருள் எது?

அ) மல்பெரி மரவுரி

ஆ) வாழை நார்

இ) பருத்தி

ஈ) கம்பளி

விடை: ஆ) வாழை நார்


12. பன்னாடை அல்லது நெய்யரி எதைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது?

அ) பருத்தி

ஆ) பனைமரம்

இ) மல்பெரி மரவுரி

ஈ) வாழை நார்

விடை: ஆ) பனைமரம்


12. மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சை தூகாக நெய்து ஆடையாக அணியத் தொடங்கிய முயற்சி எதை உருவாக்கியது?

அ) வேளாண் தொழில்

 ஆ) நெசவு தொழிங்

இ) விலங்கு வார்ப்பு

ஈ) ஆடை இறக்குமதி

விடை: ஆ) நெசவு தொழில்


13. பன்னாடை என்றால் என்ன ?

அ) பருத்தி செடியின் நூல்

ஆ) பனை மற்றும் தென்னையின் இளைய மரத்து அடியில் இருக்கும் துணி போன்ற பொருள்

இ) மல்பெரி மரத்தின் தண்டு

ஈ) கம்பளி விலையின் தோல்

விடை: ஆ) பனை மற்றும் தென்னையின் இளைய மரத்து அடியில் இருக்கும்


14. பழங்காலத்தில் மக்கள் ஆடையாக பயன்படுத்திய பொருட்களில் எது அடங்காது?

அ) தழை மற்றும் இலை ஆடைகள்

 ஆ) மரப்பட்டைகள் 

(இ) மான் மற்றும் புலி தோல்

ஈ) பருத்தி பஞ்சால் நெய்த ஆடை

பதில்: ஈ) பருத்தி பஞ்சால் நெய்த ஆடை

15. "கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ என்றவரிகள் இடம்பெற்ற நூல் எது?

அ) தொல்காப்பியம் 

ஆ) திருக்குறள்

இ) நன்னூல் 

ஈ) சிலப்பதிகாரம்

விடை: அ) தொல்காப்பியம்


16 "பருத்தி நெசவு முதன் முதலில் இந்தியாவில்தான் செய்யப்பட்டதென்றும். அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவியது" என்ற கூற்றைக் கூறியவர் யார்?

அ)வயவர் சான்மார்சல் 

ஆ) கால்டுவெல் 

இ) ஜி.யு.போப் 

ஈ) ஜோஸ்ப் பெஸ்கி

விடை அ) வயவர் சான்மார்சல்


17. ஹெரடோடஸ் இந்திய பஞ்சை

எவ்வாறு குறிப்பிட்டார்?

அ) மரங்களில் வளரும் பஞ்சு

ஆ) மண்ணில் வளரும் பஞ்சு"

இ) ஆடுகளால் தரப்படும் பஞ்சு

ஈ) 'வானத்தில் மிதக்கும் பஞ்சு*

விடை: அ) மரங்களில் வளரும் பஞ்சு


18. எகிப்தில் அரசர்களின் உடல்கள் எதனால் பொதியப்பட்டிருந்தன?

அ) சீன பட்டு

ஆ) இந்திய மசுலின் துணி

(இ) அரேபிய பட்டு

ஈ) எலுமிச்சை இலை

விடை: ஆ) இந்திய மசுலின் துணி


19. பருத்திக்கு அப்பாற்பட்டு எந்தெந்த மரங்களில் இருந்து பஞ்சு சேகரிக்கப்பட்டது?

அ)இலவமரம், கோங்குமரம்

ஆ) தேங்காய் மரம் பனைமரம்

இ) வேப்பமரம், ஆமணக்கு மரம்

ஈ) மாமரம். கொய்யா மரம்


விடை அ) இலவமரம் கோங்குமரம்


20. பின்வருவனவற்றுள் நெசவுத் தொழிலுக்கு முதன்மை மூலப்பொருள் எது?

அ) வேப்பமரம்

ஆ) பருத்தி

இ) கள்ளி

ஈ) கஞ்சா இலை

விடை: ஆ) பருத்தி

21.பருத்தியை விதைகள் மற்றும் தோலிலிருந்து பிரிக்க எந்த கருவிபயன்படுத்தப்பட்டது?

அ) அச்சாணி

ஆ) மத்து

இ) அரிவாள்

ஈ) கலப்பை

விடை ஆ) மத்து


22.புறநானூற்றில் 'சிறை' மற்றும் 'செற்றை' என்பவை எதை குறிக்கின்றன?

அ) பருத்தியின் மலர் மற்றும் பழம்

ஆ) பருத்தியின் புறத்தோல் மற்றும் தூசி

இ) பருத்தியின் விதை மற்றும் முள்

ஈ) பருத்தியின் நூல் மற்றும் நார்

விடை: ஆ) பருத்தியின் புறத்தோல் மற்றும் தூசி


23. அகநானூற்றில் மழைக்கு பின் மேகத்திற்கு கொடுக்கப்பட்ட உவமை எது?

அ) வில்லெறி பஞ்சு

ஆ) கண்ணாடி ஒளி

இ) வெண்மணி

ஈ) முத்துக்கள்

விடை அ) வில்லெறி பஞ்சு


24. நற்றிணையில் வில்லெறி பஞ்சு எதற்குச் சமானமாகக் கூறப்பட்டது?

அ) மலையின் பனி

ஆ) கடல் நுரை

இ) ஆற்றின் நீர்

(ஈ) நிலாவின் ஒளி

விடை: ஆ) கடலின் நுரை

25.பருத்திப் பஞ்சை நுண்ணிய நூலாக நூற்பதில் திறமை பெற்ற பெண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

அ) ஆடற் பெண்டிர்

ஆ) பருத்திப் பெண்டிர்

இ) பாடற் பெண்டிர்

ஈ) காவற் பெண்டிர்

விடை: ஆ) பருத்திப் பெண்டிர்

26.முற்காலத்தில் கணவரை இழந்த பெண்கள் பெரிதும் ஈடுபட்ட தொழில் எது?

அ) வேளாண்மை

ஆ)நூற்பு

இ) மண் பானைச் செய்தல்

ஈ) மீன்பிடி

விடை ஆ) நூற்பு.

27. பருத்திப் பெண்டிர் என ஏன் அழைக்கப்பட்டனர்?

அ) ஏர் உழுதமையால்

ஆ) பருத்தி நூல் நூற்றமையால்

இ) தையல் செய்தமையால்

ஈ) விவசாயம்செய்தமையால்

விடை: ஆ) பருத்தி நூல் நூற்றமையால்


28.பருத்திப் பெண்கள் நூற்ற நூலைப் பாவாக விரித்து ஆடையாகக் கொடுத்த

கடமை யாருக்கு இருந்தது?

அ) பெண்கள்

ஆ)குழந்தைகள்

இ) ஆண்கள்

ஈ) முதியோர்

விடை: இ) ஆண்கள்


29 திறந்தவெளியில் நான்கு அடி உயரத்தில் பல கற்கள் நட்டு நூல்கள்ட் கட்டப்பட்ட இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

அ) வீடு

ஆ) பாவடி

இ) கல்லறை

ஈ) மாளிகை


விடை: ஆ) பாவடி


30. முப்பது திரிகள் கொண்டது எவ்வாறு அழைக்கப்பட்டது?

அ) ஒரு பாவு

ஆ) ஒரு கட்டு

இ) ஒரு போவணி

ஈ) ஒரு ஜத்தம்


விடை :ஆ) ஒரு கட்டு


31 ராட்டை இயந்திரத்தின் மூலம் நூலாக்கப்படும் திரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

அ)எதிர் 

ஆ) போவனி 

இ) பாவு 

ஈ) பாவுஜத்தம்

விடை: அ) கதிர்


32. போவனியில் சேமிக்கப்பட்ட நூல்கள் அடுத்ததாக மாற்றப்படும் சக்கரத்தின் பெயர் என்ன?

அ) கட்டு

ஆ) பாவு

இ) பாவுஐத்தம்

ஈ) கதிர்

விடை: (இ) பாவுஜத்தம்


33. பாவுஜத்தத்தில் உள்ள நூல்களின் சராசரி நீளம் மற்றும் எண்ணிக்கை என்ன?

அ) 20 மீட்டர். 2000 இழைகள்

ஆ) 30 மீட்டர்.3000 இழைகள்

இ) 40 மீட்டர்,4000 இழைகள்

ஈ) 50 மீட்டர். 5000 இழைகள்

விடை: இ) 40 மீட்டர். 4000 இழைகள்



34. பாவு நூலின் மீது என்ன பூசி இளவெயிலில் காயவைத்தனர்?


அ) பால்

ஆ) அரிசிக்கஞ்சி

இ) தேன்

ஈ) எண்ணெய்

விடை:  ஆ) அரிசிக்கஞ்சி


35. பாவு ஒட்டுதலுக்குப் பயன்படுத்திய குச்சி எதனால் செய்யப்பட்டதாய் இருந்தது?

அ) சுல்

ஆ) முன்

இ) மரவேர்

ஈ) எலும்பு

விடை: இ) மரவேர்


36. பாவுக்குச்சியின் நீளம் சுமார் எவ்வளவு?

அ) 3 அடி

ஆ) 4 அடி

இ) 5 அடி

ஈ) 6 அடி

விடை: ஈ) 6 அடி


37. பாவு ஒட்டுதல் நடந்தபின் நூல்கள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன

அ) பாய் நெய்ய

ஆ) கைத்தறி நெசவுக்கு

இ) கயிறு செய்

ஈ) ஓவியம் வரைய


விடை ஆ) கைத்தறி நெசவுக்கு


38. துணி நெய்யப் பயன்படுத்திய முக்கிய இயந்திரம் எது?


அ ) கலப்பை

ஆ) தறி

இ) மத்து

ஈ) உலக்கை


விடை ஆ) தறி


39. கீழ்காண்பனவற்றுள் தறியின் ஒரு பகுதி எது?


அ) அச்சு மரம்

ஆ) அரிவாள்

இ) விறகு

ஈ)அச்சு மரம்

விடை: அ) அச்சு மரம்


40 தெசவுத் தொழில் பழங்காலத்தில் எவ்வாறு நடைபெற்றது?

அ) அரண்மனைகளில்

ஆ) வெளிநாடுகளில்

இ) குடிசைத் தொழில்போல் வீடுகளில்

ஈ) சந்தையில்

விடை: இ) குடிசைத் தொழில்போல் வீடுகளில்


41. பெரும்பாணாற்றுப்படை" வரிகளில் 'கச்சு' என்பது எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?


அ) தலைக்கு அணியும் ஆடை

ஆ) மார்பில் அணியும் ஆடை

இ) கையில் அணியும் ஆடை

ஈ) இடுப்பில் அணியும் ஆடை

விடை: ஆ) மார்பில் அணியும் ஆடை


42 மெய்யாப்பு எனப்படுவது எந்த வகை ஆடை

அ) சட்டை

ஆ) புடவை

இ) கச்சு,

ஈ) நெற்றி அலங்காரம்

(விடை: அ) சட்டை


43. ஆடைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பெயர்களில் ஒன்று அல்லாதது எது?

அ) துகில் 

ஆ) சேக்கை

இ) பூந்துகில்

ஈ) வலயம்

விடை: ஈ) வலயம்



44. அடியார்க்கு நல்லார் குறிப்பிட்ட ஆடைகளின் பெயர்கள் எண்ணிக்கை எத்தனை?

அ) 16

ஆ) 28

இ) 36

ஈ) 40

விடை: இ) 36


45 பழந்தமிழ் அரசர்கள் வறியவர்களுக்கு அளித்த உடைகள் எவ்வாறு விருத்தனர்


அ) பாம்பின் தோல் போல பளபளப்புடன் பூ வேலைப்பாடுகளோடு

ஆ) எளிய பஞ்சுத் துணிகள்

இ) கிழிந்த பழைய உடைகள்

ஈ) வண்ணமற்ற கோரைகள்

விடை: 

அ) பாம்பின் தோல் போல பளபளப்புடன் பூ வேலைப்பாடுகளோடு

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

பிரித்தெடுக்கும் Group 4 Tamil





TNPSC GROUP 4 தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவும் வகையில் எடுக்கப்பட்டது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி பள்ளி புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.

PDF பதிவிறக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் 

https://drive.google.com/file/d/1GUkQKm3xmPNDi8615YTI1YNBdi8UFl2c/view?usp=drivesdk

வெள்ளி, 3 மே, 2024

Group 4 tamil important questions தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதிதாசன்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் 

பாரதிதாசன் பற்றிய செய்திகள்



 1. "தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் " என்று பாடியவர் யார்?

Ans : பாரதிதாசன்

2. பாரதிதாசனின் இயற் பெயர் என்ன?

Ans : கனக சுப்புரத்தினம்

3. புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

Ans : பாரதிதாசன்

4. சுப்புரத்தினம் யாருடைய கவிதைகள் மீது கொண்ட பற்றினால் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்?

Ans: பாரதியார்

5. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் ?

Ans : நிலவு மணம் 

6. பிசிராந்தையார் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்?

Ans : புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

7. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறும் பறவை?

Ans : மயில்

8. "உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்" என்று பாடியவர் யார்?

Ans : பாவேந்தர் பாரதிதாசன்

9. "கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நி லத்தில் புல் விளைந் திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை" என்று பாடியவர்?

Ans : பாவேந்தர் பாரதிதாசன்

10. குடும்ப விளக்கு _________பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?

Ans : 5

11. சாகித்ய அகாதமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடக நூல்?

Ans : பிசிராந்தையார்

12. 'பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது" என்று பாடியவர்?

Ans : பாரதிதாசன்

13. "அத்தனை பேரும் மெய்யாய் அப்படித் தானே மானே? பித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே!" என்று பாடியவர்?

Ans : புரட்சிக் கவிஞர்

14. "இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள்கூடி இரையுண்ணும்....." - என்ற கவிதையை எழுதியவர் யார்?

Ans : பாரதிதாசன்

15. "அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.-  என்ற கவிதையை எழுதியவர் யார்?

Ans : பாரதிதாசன்

16. "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின்தோள்கள்?" என்று பாடியவர் யார்?

Ans : பாரதிதாசன்

17. வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் நூலைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் 1937 ல் இயற்றப்பட்டது எது?

Ans : புரட்சிக் கவி

18. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழில் தந்தவர் யார்?

Ans : பாரதிதாசன்

19. பாரதிதாசன் நடத்திய இதழ்?

Ans : குயில்

20. பாரதிதாசன் உரை எழுதிய நூல் எது?

Ans : திருக்குறள்

21. தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் ஒரு பல்கலைக்கழகத்தை எங்கு நிறுவியுள்ளது?

Ans : திருச்சிராப்பள்ளி

22. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" என்று முழங்கியவர் யார்?

Ans : பாரதிதாசன்

23. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்றவர் யார்?

Ans : பாரதிதாசன்

24. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!" என்று பாடியவர் யார்?

Ans : பாரதிதாசன்

25. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

Ans : பாரதிதாசன்

26. சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தா வென்றே இயற்கை அன்னை வானில் எழில் வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?" என்ற பாடலை இயற்றியவர் யார்?

Ans : புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

27. "ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன் வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விழைதல் இல்லான்" - என்று மயிலை சீனி. வேங்கடசாமி குறித்து பாடியவர் யார்?

Ans : பாவேந்தர்

28. 'பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்தவர்' என்று பாரதியாரால் முன்மொழியப்பட்டவர்

Ans : பாரதிதாசன்

29. பாரதிதாசன் தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் எந்த கவிஞரோடு ஒப்பிடப்படுகின்றார்?

Ans : பாரதிதாசன்

30. 1946 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக --————- என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகம் பாரதிதாசனால் எழுதப்பட்டது.

Ans : அமைதி 

WhatsApp group - Click here to join WhatsApp group


Group 4 tamil question தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதியார்

தமிழ் அறிஞர்களும் தமிழ்த்             தொண்டும் - 1

பாரதியார் பற்றிய கேள்விகள் 



 1. பாரதியார் அதிகமாக கையாண்ட பாவகை எது?

Ans : சிந்து வகை

2. காற்றே வா, மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின் மீதும், நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்தப் ராண - ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு." - என்ற பாடலை பாடியவர் யார்?

Ans : பாரதியார்

3. "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்று கூறியவர் யார்?

Ans : பாரதியார்

4. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா" மற்றும் "சிந்துக்குத் தந்தை" என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?

Ans : பாரதி

5. "பாட்டுக்கொரு புலவன்" எனப் பாராட்டப்பட்டவர் யார்?

Ans : பாரதி

6. "காற்று" என்னும் தலைப்பிலான வசன கவிதையை எழுதியவர் யார்?

Ans : பாரதியார்

7. "இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" - என்றவர் யார்?

Ans : பாரதி

8. உரைநடையும், கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் வசன கவிதை வடிவம் தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?

Ans : பாரதியார்

9. "கத்துங் குயிலோசை- சற்றே வந்து காதிற் பட வேணும்" -என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

10. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே -தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி யாரம் படைத்த தமிழ்நாடு" -என்ற பாடலை எழுதியவர் யார்?

Ans : சுப்ரமணி பாரதி

11. "கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்" என்று பெருமைப்படுபவர் யார்?

Ans : பாரதியார்

12. கவிதையினை இயன்றவரை பேசுவது போல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்று கூறியவர்

Ans : பாரதி

13. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றவர்

Ans : பாரதி

14. பாரதி தமிழாசிரியராகப் பணிபுரிந்த இடம் எது?

Ans : மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி 

15. பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய இதழ் எது?

Ans : சுதேசமித்திரன்

16. பாரதி கருத்துப்படங்களை மட்டுமே கொண்டு நடத்த விரும்பிய இதழ் எது?

Ans : சித்திராவளி

17. பாரதியார் பெண்களுக்காக குறள் வெண்பா எழுதிய இதழ் எது?

Ans : சக்கரவர்த்தினி

18. பாரதி சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்ட இதழ் எது?

Ans : இந்தியா

19. சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது சொற்புதிது சோதிமிக்க நவகவிதை - என்று பாடியவர்?

Ans : பாரதி

20. ஷெல்லியின் கவிதைகளால் கவரப்பட்டு, தமது பெயரை ஷெல்லிதாசன் என மாற்றிக் கொண்டவர்?

Ans : பாரதியார்

21. மகாகவி பாரதியார் 1907-ல் தொடங்கிய இதழ்கள் எவை?

Ans : இந்தியா,  பாலபாரதம்


WHATSAPP GROUP 


TNPSC TAMIL WHATSAPP GROUP - Click here to join WhatsApp group



வியாழன், 2 மே, 2024

Group 4 tamil question தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் பாரதியார்

 தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - 1

பாரதியார் பற்றிய கேள்விகள் 




1. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி       போல் இனிதாவது எங்கும் காணோம்"       என்று தமிழ் மொழியின் இனிமையை       வியந்து பாடியவர் யார்?

Ans : பாரதியார்

2. "என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையைப் பறைசாற்றியவர் யார்?

Ans : பாரதியார்

3. தமிழ் மொழி போல் இனிதாவது எங்கு காணோம் என்று கூறியவர் யார்?

Ans : பாரதியார் 

4. கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதில் படவேணும் என்றன் சித்தம் மகிழ்ந்திடவே நன்றாய் இளம்தென்றல் வரவேணும் என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

5. பாரதியாரின் இயற்பெயர் என்ன?

Ans : சுப்ரமணியன் 

6. காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கூறியவர் யார்?

Ans : பாரதியார்

7. புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?

Ans : பாரதியார்

8. “வானை அளப்போம் கடல் மீனை யளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம் சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம்" என்ற பாடலைப் பாடியவர் யார்?

Ans : பாரதியார்

9. "வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம் அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

10. தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இச்செகத்தினை அளித்திடும் என்றவர் யார்?

Ans : பாரதியார்

11. நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்வாரடீ! - கிளியே என்று பாடியவர் யார்?

Ans : பாரதியார்

12. "வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்" என்று பாடியவர் யார்?

 Ans : பாரதியார் 

13. இந்தியா என்ற இதழில் முதன்முதலில் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் யார்?

Ans : பாரதியார்

14. கருத்துப் படங்களை தமிழில் அறிமுகப் படுத்தியவர் யார்?

Ans : பாரதியார்

15. பாரதியார் பிறந்த ஊர் எது?

Ans : எட்டயபுரம்

16. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே! என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

Ans: பாரதியார்

17. இந்தியா மற்றும் விஜயா முதலிய இதழை நடத்தி விடுதலைக்கு வித்திட்டவர் யார்?

Ans : பாரதியார்

18. "மனம் பாட வந்த மறவன்" என்று பாரதிதாசனால் புகழ்பெற்றவர் யார்?

 Ans : பாரதியார் 

19. "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பாடியவர்

Ans : பாரதியார்

20. பாரதியார் தன்னுடைய எந்த வயதில் "பாராதி" என்னும் பெயர் பெற்றார்?

Ans : 11 வயதில்


WHATSAPP GROUP 

TNPSC TAMIL WHATSAPP GROUP - Click here to join WhatsApp group




ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி pranayama, Breathing 🫁 Exercise 🧘‍♂️🧘‍♀️🧘😊

🧘‍♂️ மூச்சுப் பயிற்சி: இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழி 📌 அறிமுகம் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், தூக்கமின்ம...