1.ஒன்றல்ல இரண்டல்ல
1.சொல்லும் பொருளும்
ஒப்புமை – இணை
முகில் – மேகம்
அற்புதம் – விந்தை
உபகாரி – வள்ளல்
II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.
கலம்பகம்
பரிபாடல்
பரணி
அந்தாதி
விடை : பரணி
2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அகில்
முகில்
துகில்
துயில்
விடை : முகில்
3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
இரண்டு + டல்ல
இரண் + அல்ல
இரண்டு + இல்ல
இரண்டு + அல்ல
விடை : இரண்டு + அல்ல
4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
தந்து + உதவும்
தா + உதவும்
தந்து + தவும்
தந்த + உதவும்
விடை : தந்து + உதவும்
5. ‘ஒப்புமை + இல்லாத’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
ஒப்புமைஇல்லாத
ஒப்பில்லாத
ஒப்புமையில்லாத
ஒப்புஇல
விடை : ஒப்புமையில்லாத
III. குறுவினா
1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கவழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.
2. ‘ஒன்றல்ல இரண்டல்ல ’ – பாடலில் இடம் பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.
முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.
IV. சிறுவினா
1.தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?
பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
பரிபாடல் கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்
கூடுதல் வினாக்கள்
I. பொருள் தருக
முகில் – மேகம்
உபகாரி – வள்ளல்
அருள் – இரக்கம்
சொல் – கூற
கவி – கவிஞன்
II. பிரித்து எழுதுக
1.ஒன்றல்ல = ஒன்று + அல்ல
2.இரண்டல்ல = இரண்டு + அல்ல
3.செங்கனி = செம்மை + கனி
4.பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
III. எதிர்ச்சொல் தருக
1.பெருமை x சிறுமை
2.இயற்கை x செயற்கை
3.புகழ் x இகழ்
4.கனி x காய்
IV. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ________________ மிக்கவர்களாக விளங்கினர்.
விடை : கொடைத்திறன்
2. முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் ________________
விடை : வேள்பாரி
3. புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் ________________
விடை : குமண வள்ளல்
4. ‘ஒன்றல்ல இரண்டல்ல’ பாடலின் ஆசிரியர் ________________
விடை : உடுமலை நாராயண கவி
5. பகைவரை வென்று பாடுவது ________________ இலக்கியம்
விடை : பரணி
6. உடுமலை நாராயண கவியின் இயற்பெயர் ________________
விடை : நாராயணசாமி
சிந்தனை வினா
1.தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?
அற இலக்கியங்கள் எனப்படுவது அறக்கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் ஆகும்.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துமே அற நூல்களே ஆகும். இவற்றை படித்து நூலின் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இன்புறும்.
அற இலக்கியங்கள் ஒரு மனிதனின் நல் வாழ்விற்கு பயன் படக்கூடிய இனிய கருத்துக்களை கூறுபவை. இவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் மேன்மையடையலாம் எனவே தான் அற இலக்கியங்கள் மிகுதியாக தோன்றத் தொடங்கின...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக