தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்
பாரதிதாசன் பற்றிய செய்திகள்
1. "தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் " என்று பாடியவர் யார்?
Ans : பாரதிதாசன்
2. பாரதிதாசனின் இயற் பெயர் என்ன?
Ans : கனக சுப்புரத்தினம்
3. புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
Ans : பாரதிதாசன்
4. சுப்புரத்தினம் யாருடைய கவிதைகள் மீது கொண்ட பற்றினால் தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்?
Ans: பாரதியார்
5. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் ?
Ans : நிலவு மணம்
6. பிசிராந்தையார் என்னும் நாடக நூலை எழுதியவர் யார்?
Ans : புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
7. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறும் பறவை?
Ans : மயில்
8. "உலகம் உண்ண உண். உடுத்த உடுப்பாய்" என்று பாடியவர் யார்?
Ans : பாவேந்தர் பாரதிதாசன்
9. "கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் அந்நி லத்தில் புல் விளைந் திடலாம் நல்ல புதல்வர்கள் விளைதல் இல்லை" என்று பாடியவர்?
Ans : பாவேந்தர் பாரதிதாசன்
10. குடும்ப விளக்கு _________பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது?
Ans : 5
11. சாகித்ய அகாதமி விருது பெற்ற பாரதிதாசனின் நாடக நூல்?
Ans : பிசிராந்தையார்
12. 'பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது" என்று பாடியவர்?
Ans : பாரதிதாசன்
13. "அத்தனை பேரும் மெய்யாய் அப்படித் தானே மானே? பித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே!" என்று பாடியவர்?
Ans : புரட்சிக் கவிஞர்
14. "இட்டதோர் தாமரைப்பூ இதழ்விரித் திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள்கூடி இரையுண்ணும்....." - என்ற கவிதையை எழுதியவர் யார்?
Ans : பாரதிதாசன்
15. "அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல் திரட்டையே.- என்ற கவிதையை எழுதியவர் யார்?
Ans : பாரதிதாசன்
16. "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும் நிறைஉழைப்புத் தோள்களெலாம் எவரின்தோள்கள்?" என்று பாடியவர் யார்?
Ans : பாரதிதாசன்
17. வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீயம் என்னும் நூலைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் 1937 ல் இயற்றப்பட்டது எது?
Ans : புரட்சிக் கவி
18. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழில் தந்தவர் யார்?
Ans : பாரதிதாசன்
19. பாரதிதாசன் நடத்திய இதழ்?
Ans : குயில்
20. பாரதிதாசன் உரை எழுதிய நூல் எது?
Ans : திருக்குறள்
21. தமிழக அரசு பாரதிதாசன் பெயரால் ஒரு பல்கலைக்கழகத்தை எங்கு நிறுவியுள்ளது?
Ans : திருச்சிராப்பள்ளி
22. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே" என்று முழங்கியவர் யார்?
Ans : பாரதிதாசன்
23. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்" என்றவர் யார்?
Ans : பாரதிதாசன்
24. "விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை மானுட சமுத்திரம் நானென்று கூவு புவியை நடத்து; பொதுவில் நடத்து!" என்று பாடியவர் யார்?
Ans : பாரதிதாசன்
25. "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
Ans : பாரதிதாசன்
26. சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தா வென்றே இயற்கை அன்னை வானில் எழில் வாழ்வைச் சித்தரித்த வண்ணந் தானோ?" என்ற பாடலை இயற்றியவர் யார்?
Ans : புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
27. "ஓங்கிடச் செய்வ தொன்றே உயிர்ப்பணியாகக் கொண்டோன் வீங்கிட மாட்டான் கல்வி விளம்பரம் விழைதல் இல்லான்" - என்று மயிலை சீனி. வேங்கடசாமி குறித்து பாடியவர் யார்?
Ans : பாவேந்தர்
28. 'பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்தவர்' என்று பாரதியாரால் முன்மொழியப்பட்டவர்
Ans : பாரதிதாசன்
29. பாரதிதாசன் தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் எந்த கவிஞரோடு ஒப்பிடப்படுகின்றார்?
Ans : பாரதிதாசன்
30. 1946 ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக --————- என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகம் பாரதிதாசனால் எழுதப்பட்டது.
Ans : அமைதி
WhatsApp group - Click here to join WhatsApp group




