Tamil literature , General Knowledge, Tips for Competitive Exams, Grammar, Government and Private Employment News, Literature, business ideas, Health tips,motivational , etc are posted on this blog.
வியாழன், 11 மே, 2023
குற்றியலுகரமும் அதன் வகைகளும்
வியாழன், 30 மார்ச், 2023
மின்மினிப் பூச்சி ஏன் ஒளிர்கிறது?
நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் இருக்கும். எப்படி மின்மினிப் பூச்சி ஒளிர்கிறது என்று🤔எனக்கும் இதே சந்தேகம் பல வருடம் உள்ளது.
ஓர் இரவில் தீடீரென மின்மினிப் பூச்சியைப் பார்த்து வியந்தேன்😃 . மின் விளக்குகள் அனைத்தும் அனைந்திருக்க பச்சை நிறத்தில் பிரகாசமான ஒளி நின்று நின்று ஒளிர்ந்தது.
எப்படி இந்தப் பூச்சி ஒளிர்கிறது என்று தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவலுடன் இருந்தேன். இணையத்தில் சென்று படித்ததில் மிகவும் வியப்புக்குள்ளானேன்.
இப்போது எதனால் ஒளிர்கிறது என்று தெரிந்துக்கொள்வோம்...
மின்மினிப் பூச்சியும் ஒரு சாதாரண பூச்சி(பூச்சிகள்) வகையைச் சார்ந்த ஓர் உயிரினம் தான். இதன் வயிற்றில் தான் ஒளி உமிழும் உறுப்பு அமைந்துள்ளது. இதன் வயிற்றில் நடக்கும் வேதிவினையே ( chemical reactions) ஒளி உமிழக் காரணமாகிறது. இதற்கு உயிர் ஒளி உமிழும் தன்மை என்று பெயர்.
இப்பூச்சிகளின் உடலில் லூசிஃபெரேஸ் என்னும் ஒளி உமிழ்தலைத் தூண்டும் நொதி ஒன்று சுரக்கிறது. இந்நொதியிலிருந்து உருவாகும் லூசிஃபெரின் என்னும் கரிமப்பொருள் கால்சியம், அடினோசைன் டிரை பாஸ்பேட், ஆக்ஸிஜனின் ஆகியவற்றுடன் வினைபுரிந்து ஒளி உண்டாகிறது.
உயிரினங்கள் உண்ணும் உணவானது அடினோசைன் டிரை பாஸ்பேட் என்னும் வேதிச் சேர்மத்தின் வடிவில்உடலில் சக்தியாக சேமித்து வைக்கப்படுகிறது.
மின்மினிப் பூச்சிகள் ஒளி உருவாக்க தேவையான வேதிப்பொருட்களுடன் ஆக்டிரியாச் சேர்த்து வேதிவினையின் தொடக்கம் மற்றும் முடிவைக் கட்டுப்படுத்துகிறது.
அதாவது ஆக்ஸிஜன் இருக்கும்போது ஒளி வெளிப்படும். ஆக்ஸிஜன் இல்லாத போது ஒளி வெளியிடப்படாது.
மின்மினிப் பூச்சிகளுக்கு நுரையீரல் கிடையாது. அவை உடலின் வெளிப்பகுதியிலிருந்து உட்புறச் செல்களுக்கு டிராக்கியோல்கள் எனப்படும் தொடர் குழாய்கள் மூலம் ஆக்ஸிஜனைப் பெறுகின்றன.
பொதுவாக விளக்குகள் எரியும் போது ஆற்றலானது ஒளியாகவும், வெப்பமாகவும் வெளிப்படும். அதாவது ஒரு பல்ப் எரியும் போது 10 சதவீதம் ஒளி ஆற்றலையும், 90 சதவீதம் வெப்ப ஆற்றலையும் வெளியிடுகிறது.
ஆனால் மின்மினிப் பூச்சிகள் உடலில் நடைபெறும் வேதியாற்றல் முழுவதும் (100 சதவீதம்) ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது. வெப்ப சக்தி வெளியிடப்படுவதில்லை. ஆதலால் மின்மினிப் பூச்சிகள் குளிர்ந்த விளக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.
இப்பூச்சிகளின் பல்வேறு இனங்கள் வெவ்வேறு கால அளவுகளில் பல்வேறு வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன.
திருக்குறளில் உளவியல் சிந்தனைகள்
thirukkural-ulaviyal-sinthanaigal-tamil.jpg திருக்குறளில் உளவியல் சிந்தனைகள் – மனித மனதை வழிநடத்தும் திருவள்ளுவரின் அறிவியல் அறிமுகம் உலக ...
