link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space

வெள்ளி, 16 ஜூன், 2023

NET Hall ticket 2023 வெளியீடு



தேர்வு அனுமதிச் சீட்டு வெளியானது

 National Eligibility Test) தேசிய தகுதித் தேர்வு இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவித் தொகை (JRF - Junior Research Fellowship) பெறுவதற்கான தகுதியினையும் நிர்மாணிக்கப்பதற்காகா UGC - NTA -வால்தேர்வு நடத்தப்படுகிறது...


இந்நிலையில் ஜீன் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய தகுதி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.


இதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த தேர்வர்கள் தங்கள் அனுமதி சீட்டினை பதிவிறக்கி தேர்வு எழுதும் இடத்தை அறிந்துக்கொள்ள யுஜிசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

எப்படி பதிவிறக்குவது

1. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
 
2.யுஜிசி அனுமதி சீட்டு 2023 என்ற இணைய தள முகவரியை சொடக்கவும்

3. உங்கள் பதிவெண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு எண்ணை பதிவிட்டு உங்கள் அனுமதி சீட்டினை பதிவிறக்கிக் கொள்ளலாம்.

முக்கிய இணைப்புகள் 

அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே சொடுக்கவும் 

நேரடி பதிவிறக்கம் - இங்கே சொடுக்கவும்

புதன், 14 ஜூன், 2023

ஆறாம் வகுப்பு தமிழ் பெருஞ்சித்திரனார் பாடல்கள் "தமிழ்க்கும்மி" முக்கிய வினாக்கள்

      

ஆறாம் வகுப்பு தமிழ்        தமிழக்கும்மி முக்கிய                   வினாக்கள்


   சரியான விடையைத்       தேர்ந்தெடுத்து எழுதுக


1. தாய் மொழியில் படித்தால் ------ அடையலாம்

    அ) பன்மை  ஆ) மேன்மை

 இ) பொறுமை  ஈ) சிறுமை

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் ------ சுருங்கிவிட்டது

    அ) மேதினி  ஆ) நிலா 

 இ) வானம்  ஈ) காற்று

3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது_______

    அ) செந் + தமிழ்  ஆ) செம் + தமிழ் 

    இ) சென்மை + தமிழ் 

    ஈ) செம்மை + தமிழ்

4. பொய்யகற்றும்’ என்னும் சொல்லை ப் பிரித்து எழுதக் கிடைப்பது_________

    அ) பொய் + அகற்றும்

   ஆ) பொய் + கற்றும்

    இ) பொய்ய + கற்றும் 

 ஈ) பொய் + யகற்றும்

5. பாட்டு+ இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் --------

    அ) பாட்டிருக்கும்  ஆ) பாட்டுருக்கும்

   இ) பாடிருக்கும்  ஈ) பாடியிருக்கும்

6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

    அ) எட்டுத்திசை  ஆ) எட்டிதிசை 

  இ) எட்டுதிசை  ஈ) எட்டிஇசை

7. பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?

     அ) துரைமாணிக்கம் ஆ) சாமிதுரை

     இ) இராசமாணிக்கம் ஈ) துரைசாமி

8. “மாணிக்கம்” என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்

     அ) பாரதியார் ஆ )பாரதிதாசன்

     இ) பெருஞ்சித்திரனார் ஈ) கவிமணி

9. “பாவலரேறு” என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படும் கவிஞர்

     அ) பாரதியார் ஆ)பாரதிதாசன்

     இ) பெருஞ்சித்திரனார் ஈ) கவிமணி

10. நம் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடலைப் பாடியவர்

     அ) பாரதியார்

    ஆ) கண்ணதாசன்

     இ) பெருஞ்சித்திரனார் 

      ஈ) கவிமணி

11. நம் பாடப்பகுதியில் இடம்பெறும் தமிழ்க்கும்மி கவிதைப்பேழை பாடல் இடம்பெறும் நூல்

      அ) கனிச்சாறு 

     ஆ) கொய்யாக்கனி

      இ) பாவியக்கொத்து

      ஈ) நூறாசிரியம்

12. “தென்மொழி. தமிழ்ச்சிட்டு. தமிழ் நிலம்” ஆகிய இதழ்களை நடத்தியவர்

      அ) கல்யாண சுந்தரனார்

      ஆ) கண்ணதாசன்

      இ) பெருஞ்சித்திரனார் 

       ஈ) சுரதா

13. திசைகள் ________ செந்தமிழின் புகழ் பரவ வேண்டும்.

     அ) இரண்டிலும் ஆ) எட்டிலும்

     இ) நான்கிலும் ஈ) பத்த்திலும்

14. ________ சிறந்து வாழ்வதற்கான வழிகாட்டு முறைகள் காெண்டது தமிழ்.

      அ) உலகம் ஆ) ஊர்

      இ) தெரு‌ ஈ) நாடு


 கோடிட்ட இடங்களை நிரப்புக


1. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாலவர் ________

விடை : பெருஞ்சித்திரனார்

2. எட்டுதிசையிலும் ________புகழ் எட்டிடவே கும்மி கொட்டுங்கடி- விடுபட்ட சொல்லை நிரப்புக

விடை : செந்தமிழின்

3. ________ பல நூறு ஆண்டுகளைக் கணடது

விடை : தமிழ்மொழி

4. பொய்யாமை அகற்றும் மொழி ________

விடை : தமிழ்மொழி

5. உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி ________

விடை : தமிழ்மொழி


பொருள் கூறுக


1. ஆழி - கடல்

2. மேதினி - உலகம்

3. மேன்மை - உயர்வு

4. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி


திங்கள், 12 ஜூன், 2023

UGC NET City allotment June 2023

 

UGC – NET ஜூன் 2023                நகர அறிவிப்பு


(National Eligibility Test) தேசிய தகுதித் தேர்வு இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவித் தொகை (JRF - Junior Research Fellowship) பெறுவதற்கான தகுதியினையும் நிர்மாணிக்கப்பதற்காகா UGC - NTA -வால்
தேர்வு நடத்தப்படுகிறது...

இந்நிலையில் ஜீன் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய தகுதி தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியானது.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த தேர்வர்கள் தங்கள் தேர்வு எழுதும் நகரத்தை முன்கூட்டியே அறிய யுஜிசி வெளியிட்டுள்ளது.

தேர்வெழுதும் நகரத்தை எப்படி தெரிந்துக் கொள்வது

1. யுஜிசி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. சமீபத்திய செய்திகளில் உள்ள
UGC – NET ஜூன் 2023 நகர அறிவிப்பு என்பதை சொடுக்க வேண்டும்

3.பின் பதிவெண், பிறந்த தேதி மற்றும் பாதுகாப்பு எண்ணை பதிவிட்டு உங்கள் தேர்வு மையத்தின் நகரத்தை அறியலாம்.

முக்கிய இணைப்புகள் 

1. யுஜிசி அதிகாரப்பூர்வ இணையதளம் - இங்கே சொடுக்கவும்

2. நகர் அறிவிப்பிற்கான நேரடி வலைத்தளம் - இங்கே சொடுக்கவும்

செவ்வாய், 6 ஜூன், 2023

இன்பத் தமிழ் ஆறாவது தமிழ் 6th TNPSC Tamil

                    இன்பத்தமிழ்


 தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

                                  - பாரதிதாசன்



   பாரதிதாசன் குறிப்பு


• பெயர் : பாரதிதாசன்

• இயற்பெயர் : சுப்புரத்தினம்

• பிறந்த ஊர் : புதுச்சேரி

• பெற்றோர் : கனகசபை – இலக்குமி அம்மையார்

• பணி : தமிழாசிரியர்

• காலம் : 29-04-1891 முதல் 21-04-1964 வரை

சிறப்புப்பெயர் :

              1.பாவேந்தர்

                 2.புரட்சிக்கவிஞர்

இயற்றிய நூல்கள் :

                 1.குடும்ப விளக்கு

                    2.பாண்டியன் பரிசு

                    3.பிசிராந்தையார்

                    4.அழகின் சிரிப்பு

  

                   வினாக்கள் 

1) "தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்" எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார் ?

Answer : பாரதிதாசன்


2) பாரதிதாசன் இயற்பெயர் ?

Answer : கனக சுப்புரத்தினம்

3) சுப்புரத்தினம் பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாக தம் பெயரை எவ்வாறு மாற்றிக் கொண்டார் ?

Answer : பாரதிதாசன் 

4) புரட்சிக் கவி என அழைக்கப்படுபவர் யார் ?

Answer : பாரதிதாசன்

5) பாவேந்தர் என அழைக்கப்படுபவர் யார் ?

Answer : பாரதிதாசன்

உருவாக்கப்பட்ட ______ஆகும் ?

Answer : ஊர்

6) தமிழ் எங்கள் இளமைக்கு காரணமான பால் போன்றது. நல்ல புகழ் மிகுந்த புலவர்களுக்கு கூர்மையான _____ போன்ற கருவி ஆகும்?

Answer : வேல்

 

7) தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பதமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் _______ போன்றது?

Answer : தேன்

8) தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ்
எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க __________ ஆகும் ?

Answer : வாள்


9) தமிழ் எங்கள் இளமைக்கு காரணமான பால் போன்றது. நல்ல புகழ் மிகுந்த புலவர்களுக்கு கூர்மையான _____ போன்ற கருவி?

Answer : வேல்

 

10) தமிழ் எங்கள் உயர்விற்கு எல்லையாகிய வானம் போன்றது. இன்பதமிழ் எங்கள் சோர்வை நீக்கி ஒளிரச் செய்யும் _______ போன்றது?

Answer : தேன்

11) தமிழ் எங்கள் அறிவுக்கு துணை கொடுக்கும் தோள் போன்றது. தமிழ்

எங்கள் கவிதைக்கு வைரம் போன்ற உறுதி மிக்க __________ ஆகும் ?

Answer : வாள்



BOOK BACK வினாக்கள் & விடைகள்



12) ஏற்றத்தாழ்வற்ற ______ அமைய வேண்டும் ?

Answer : சமூகம்

13) நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு _______
ஆக இருக்கும் ?

Answer : அசதி

14) நிலவு + என்று என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ?

Answer : நிலவென்று

15) தமிழ் + எங்கள் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ?

Answer : தமிழெங்கள்

16) அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது ?

Answer : அமுது + என்று

17) செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது ?

Answer : செம்மை + பயிர்

18) சொல்-பொருள் தருக

1) நிருமித்த - உருவாக்கிய

2) சமூகம் - மக்கள் குழு

3) விளைவு - வளர்ச்சி

4) அசதி - சோர்வு







ஞாயிறு, 4 ஜூன், 2023

சிறுபாணாற்றுப்படையில் பாணனின் வறுமை

     

    

              சிறுபாணாற்றுப்படை 


சங்க இலக்கிய நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் மூன்றாவதாக அமைந்துள் நூல் சிறுபாணாற்றுப்படை ஆகும்.

சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் ஆவார்.

இந்நூல் மொத்தம் 269 அடிகளைக் கொண்டதாகும்.

ஓய்மாநாட்டு நல்லிமக் கோடனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூலாகும்.

நல்லியக்கோடனனிடம் பரிசில் பெற்ற சிறுபாணன் வழியில் வரும் இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்ததே சிறுபாணாற்றுப்படை ஆகும்.

ஆற்றுப்படுத்துவது என்றால் நெறிப்படுத்துதல் என்ற பொருள். வழியில் வரும் பாணனை நல்லியக்கோடனிடம் சென்றால் உமக்கும் பொருள் கிடைக்கும் அதனால் வறுமை நீங்கும் என்று கூறுவதே ஆகும்.


பாணனின் வறுமை

                                    சிறுபாணன் நடந்துச் செல்லும் அவ்வழியானது மிகவும் கொடியது என்றாலும் அந்த வழியில் தான் சென்றாகவேண்டும். ஏனெனில் தன் பசியைப் போக்க பரிசில் வருவோரை தேடிச் செல்ல வேண்டும். இதுவே பாணனின் வாழ்வியல் நிலையாக உள்ளது எனலாம்.

............................. விண்ணா 

டிறவாக் கண்ண சாய்செவிக் 

குருவை...

கறவாப் பான்முலை கவர்த

நோனாது

புனிற்றுநாய் குரைக்கும் புல்லெ

னனட்டிற்.

என்ற பாடல் வரிகளின் மூலம் பாணனின் வறுமையை அறியமுடிகின்றது.

இந்தப் பாடல் வரிகளின் மூலம் பாணனின் அடுப்பங்கரை எவ்வாறு உள்ளது என்பதை அறியமுடிகிறது.

நாய்கள் பொதுவாக குட்டிகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் ஈனும் ஆனால் இங்கோ அடுப்பங்கரையில் குட்டிகளை ஈன்று இருக்கிறதென்றால் பாணன் வீட்டில் சமைக்க அடுப்பங்கரைக்கு சென்று எவ்வளவு நாள் ஆகியிருக்கும் என்ற வறுமை நிலையை இதன் மூலம் அறியலாம். அடுப்பங்கரையில் கண்களை திறக்காத அந்த நாய் குட்டிகள் தாயின் மடியில் பால் குடிக்கின்றன. ஆனால் தாயோ வற்றிய முலையுடன் இருப்பதால் வலியைக் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. வறுமையின் காரணமாக நாய்களும் உணவில்லை.


இப்படிப்பட்ட வீட்டில் பசியினால் வருந்தி ஒடுங்கிய வயிறையும் கைகளில் வளையல்களை அணிந்துள்ள பாணனின் மனைவியான பாடினி தன் கை விரல் நகங்களால் குப்பையில் உள்ள கீரையினைக் கிள்ளி அவற்றை உப்பில்லாமல் சமைக்கிறாள். உப்புக் கூட வாங்க முடியாத அளவிற்கு ஏழ்மையில் இருந்தது. எனவே உப்பில்லாமல் சமைத்த அந்த குப்பைக் கீரையை உண்பதைப் பார்த்தால் நினைப்பார்கள் என்று அஞ்சி தெருக் கதவினை அடைத்துவிட்டு சாப்பிட்டனர். இப்படிப்பட்ட பாணனின் வறுமைச் செய்திகளை இதன் மூலம் நன்கு அறியமுடிகின்றது.







Indian Airforce Agniveer (Army) Recruitment 2023 | 10th Pass to Any Degree | 1465 Vacancy | Apply Online




 இந்திய விமானப்படை அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2023 | 1465 காலியிடங்கள் | எந்த பட்டப்படிப்புக்கும் 10வது தேர்ச்சி | சம்பளம் ரூ 30000 முதல் 40000 வரை | தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகள் 2023 | வேலைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

நிறுவனத்தின் பெயர் -  அக்னிபாத் திட்ட வேலைகள்
வேலை பிரிவு   - மத்திய அரசு வேலைகள்
அக்னிபாத் காலியிடங்கள்   -  1465
பதவியின் பெயர்     -    அக்னிவீர்
வேலை இடம்      -   இந்தியாவில் எங்கும்
தொடக்க தேதி    -   29-05-23
கடைசி தேதி        -  15-06-23



அக்னிபாத் திட்ட வேலைகள் 2023 இந்திய கடற்படை அக்னிவீர் வேலைகள் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அக்னிபாத் திட்டம் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அரசு வேலைகளுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, சம்பளம், தேர்வு செய்யும் முறை, எப்படி விண்ணப்பிப்பது...





பதவியின் பெயர்

அக்னிவீர் பதவிகள் - 1465 காலியிடங்கள்


கல்வி தகுதி

1365 காலியிடம் - 12வது தேர்ச்சி

100 காலியிடம் - 10வது தேர்ச்சி

அதிகாரப்பூர்வ தளத்தில் மற்ற துறைகளை சரிபார்க்கவும்


வயது எல்லை

விண்ணப்பதாரர் 01 நவம்பர் 2002 - 30 ஏப்ரல் 2006 இடையே பிறந்திருக்க வேண்டும் (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கியது)

அதிகாரப்பூர்வ தளத்தில் வயது தளர்வை சரிபார்க்கவும்


சம்பளம்

ஊதிய நிலை - ரூ 30000 முதல் 40000 வரை

அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிடப்படவில்லை


தேர்வு செயல்முறை

ஆன்லைன் சோதனை

ஆவண சரிபார்ப்பு, உடல், மருத்துவ சோதனை

ஆவண சரிபார்ப்பு


விண்ணப்பக் கட்டணம்

அனைத்து விண்ணப்பதாரர்களும் - ரூ 550


முக்கியமான தேதி

தொடக்கத் தேதி – 29/05/23

கடைசி தேதி – 15/06/23


இந்திய கடற்படை அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2023 எப்படி விண்ணப்பிப்பது


1. ஆன்லைன் பயன்முறையில் மட்டும் விண்ணப்பிக்கவும்

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைச் சரிபார்க்கவும்

3. தகுதி இருந்தால், "இணைப்பைப் பயன்படுத்து" என்பதைத் தொடரவும்

4. விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து விவரங்களையும் புதுப்பிக்கவும்

5. விண்ணப்ப படிவத்தின் இறுதி சமர்ப்பிப்புக்கு முன் அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்

6. இறுதியாக விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து சரிபார்க்கவும்.

7. அதிகாரப்பூர்வ இணையதளம் - https://agnipathvayu.cdac.in/avreg/controller/showSignIn




அதிகாரப்பூர்வ இணையதளம் - இங்கே கிளிக் செய்யவும்









சனி, 3 ஜூன், 2023

சிறுபாணாற்றுப்படை கடையெழு வள்ளல்களின் சிறப்புகள்


சிறுபாணாற்றுப்படை 


சிறுபாணாற்றுப்படை என்னும் இந்நூல் பத்துப்பாட்டில் ஒன்றாக விளங்குகிறது.
இந்தச் சிறுபாணாற்றுப்படை என்னும் நூலை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார் ஆவார்.

இவர் ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.

    கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்களாவனர்
 பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி போன்றோர்கள் ஆவர்.



பேகன்

பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.


பாரி

பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.

பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப்படாத ஒரு பாடல் இது:

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே. (புறம். 107)


காரி

திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே "மலாடு" ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.

இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்: ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்!

காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.


ஆய்

பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!

வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.


அதியமான்

அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.

இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலியுடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.

அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.


நள்ளி

மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.

நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.


ஓரி

சிறிய மலைகள் உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லவராதலின், இவ் வள்ளலை "வல்வில் ஓரி" என்றும் அழைப்பர்.

ஒரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன். ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!

ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.

இந்த கடையெழு வள்ளல்களின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.

ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி pranayama, Breathing 🫁 Exercise 🧘‍♂️🧘‍♀️🧘😊

🧘‍♂️ மூச்சுப் பயிற்சி: இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழி 📌 அறிமுகம் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், தூக்கமின்ம...